இலங்கையில் உள்ள மொத்த மக்கள் சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கை முதலாவது இடத்தைப் பிடிததுள்ளது.
- Advertisement -
அதன்படி, ourworldindata.org இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளின்படி, இது 13 சதவீதமாக காணப்படுகிறது. மேலும், ஈக்வடோர் 12.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அத்துடன் புரூணை, நியூஸிலாந்து மற்றும் கியூபா முறையே 3, 4 மற்றும் 5 ஆவது இடங்களில் உள்ளன.
- Advertisement -
இதேவேளை, இது தொடர்பாக Our World நிறுவனத்தின் தலைவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் , குறித்த அறிக்கையை மேற்கோள் காட்டி கொழும்பிலுள்ள சீன தூதரகம் இலங்கைக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.