இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்களூருக்கு வாரத்திற்கு 4 விமானப் பயணங்களை செயற்படுத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அதேபோல், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இடையே வாராந்திர விமானங்களும் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹைதராபாத், புது டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விமானங்கள் இயக்கப்படும் என இலங்கை உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -
பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் நடமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டுக்கு விமானங்கள் நாளை (31) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.