இலங்கையில் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயத் தலைவர்களுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி இதுவரை கோவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அது தொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
- Advertisement -
அதேவேளை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக சில தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்து சமயத் தலைவர்களுக்கான தொலைபேசி இலக்கம் – 071 44 71 128, இஸ்லாமிய சமய தலைவர்களுக்கான தொலைபேசி இலக்கம் – 076 13 95 362, கிறிஸ்தவ சமய தலைவர்களுக்கான தொலைபேசி இலக்கம் – 071 40 61 132