இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து வருகின்ற நிலையில், தற்கொலைகளும், வன்முறைத் தாக்குதல்களும் சமூகத்தில் அதிகரித்துள்ளன. அதன்படி, இரு இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஓர் இளைஞனின் இரு கைகளையும் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
குறித்த சம்பவம், ரத்கம சிறிகந்துருவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனனர். இச்சம்பவத்தில், படுகாயமடைந்த இரு இளைஞர்களும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -

மேலும், குறித்த இளைஞர்கள் இருவர் மீதும் ஐந்து அல்லது ஆறு பேர் இணைந்து சாலையில் வைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இச்சம்பவத்தில் கைகள் வெட்டப்பட்ட இளைஞன் உட்பட மற்றைய ளைஞரும் படுகாயமடைந்த நிலையில், கைகள் வெட்டப்பட்ட இளைஞனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.