நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையை இராணுவத்தினர் நாளை முதல் ஆரம்பிக்க உள்ளனர். மேல்மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள இச்சேவையில் விசேட தேவையுடையோர், முதியவர்கள், நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படுமென இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
- Advertisement -
10 சிறப்பு நடமாடும் வாகனங்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளதோடு, 1906 அல்லது 0112860002 இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பதிவு செய்துக்கொள்ள வேண்டுமெனவும் இராணுவம் அறிவித்துள்ளது. இவ்வாறு பதிவு செய்துக்கொள்வோரின் இடங்களுக்கே சென்று இராணுவத்தினர் தடுப்பூசிகளை செலுத்துவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.