உலகில் திடீரென கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில், கோவிட் தடுப்பூசிகள் அவசரமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. எனவே அவை உரிய பயன் கொண்டவை அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தட்டம்மை, போலியோ மற்றும் பெரியம்மை ஆகியவற்றுக்கு மருத்துவ நிபுணர்கள் தடுப்பூசிகளை தயாரிக்க குறைந்தது ஏழு ஆண்டுகள் பிடித்தன. எனினும் கோவிட்டிற்கான தடுப்பூசிகள் அவசரமாக தயாரிக்கப்பட்டுள்ளன. மொடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தொழிநுட்பம் மரபணு மாற்றப்படும் ஒரு நவீன தொழிநுட்பமாகும்.
- Advertisement -
இது மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்வதைப் போன்றது. மரபணு மாற்றப்பட்ட உணவு ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மொடர்னா மற்றும் ஃபைசர் போன்ற தடுப்பூசிகள் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் சினோபார்ம், ஸ்புட்னிக் வி மற்றும் எஸ்ட்ராசெனெகா ஆகியவை மிகவும் பயனுள்ளவை என்று கூற முடியும் எனவும் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.