வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் ஒன்றும் கப் ரக வாகனம் ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்குக் கால் முறிந்துள்ள நிலையில் அவர் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.