நிலவும் ஆபத்தான சூழ்நிலையை அடுத்து, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.. அத்துடன், அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
திருமண நிகழ்வுகளை நடத்துவது குறித்து விசேட அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஜனாதிபதியுடனான விசேட கலந்துரையாடலில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.