யாழ்ப்பாணம் – குருநகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களகத்தில் வேலை செய்யும் ஒருவர், அதே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணை கத் தியால் சரமாரியாக கு த்தியுள்ளார். நேற்று 12.30 மணியளவில் குறித்த பெண்ணுக்கு தலையிலும் முகத்திலும் க த்தியால் கு த்திவிட்டு, இளைஞன் குளியல் அறைக்குள்ளேயே இருந்துள்ளார்.
அங்கு இருந்தவர்கள் கா யப்பட்ட பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அதிதீ விர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். சம்பவத்தை அறிந்து, சிவில் உடையில் வந்த பொலிஸார் உடனே அவரை வெளியில் வருமாறு அழைத்துள்ளனர். அதனை இளைஞன் செவிமடுக்காது இருந்த நிலையில், பொலிஸாருடைய தொலைபேசி கெமரா மூலம் உள்ளே நிலைமையினை அறிய முற்பட்ட பொழுது,
- Advertisement -
அந்த நபர் இர த்த வெள் ளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து உடனே கதவினை உடைத்து அவரை மீட்டு அலுவலக வாகனத்தில் அழைத்துச் சென்று அதி தீவி ரசிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். பின்னர் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார்,
அந்த பெண் மாணிப்பாயை சேர்ந்தவரும் விவாகரத்துமாணவர். இவரை அதே அலுவலகத்தில் இருந்த புலோலியைசேர்ந்த ஆண் உத்தியோகத்தர் விரும்புவதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஏற்கனவே மாணிப்பாய் பொ லிஸில் முறைப்பாடு செய்ததுடன், பொலிஸார் அவரை எச் சரித்து விடுவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்று, இரண்டு கிழமையின் பின், நேற்று இந்த க த்தி கு த்து இடம்பெற்றுள்ளது. இளைஞன், கத் தியினை கொண்டு கண்மூடித்தனமாக குத் திவிட்டு குளியல் அறையில் சென்று இன்னொரு கத் தியினால் தனது வயிற்று பகுதியில் குத் தியும் கிளி த்தும் உள்ளார்.
அவரை சரியான நேரத்தில் வந்து பொலிஸார் மீட்டுள்ளனர். காயப்பட்ட பெண் அதிதீ விர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அந்த இளைஞனின் அலுவலக மேசையில் இருந்து இன்னும் இரண்டு கத் தியும் ஒரு கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினர் மிகுதி விசாரணையினை மேற்கொண்டு வருகிறார்கள்.