தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது, கடந்த ஜுன் மாதம் 1.45 சதவீதத்தினைப் பதிவுசெய்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள், இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
- Advertisement -
மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள், முறையே 1.23 சதவீதத்தினையும் 0.22 சதவீதத்தினையும் பதிவுசெய்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.