யாழ் போதனா வைத்தியசாலையில் இறந்தவரின் பிரேத பரிசோதனை செய்வதற்காக உறவினரொருவர் சென்றிருந்த வேளையில், வைத்தியசாலை பிரேத பரிசோதனை செய்யும் கூடத்தில் வேலை செய்யும் அதிகாரிகளால் 7000 ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாக முறைப்பாடு ஒன்று கிடைக்கபெற்றுள்ளது.
- Advertisement -

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது முகநூல் புத்தகத்தில் இதனை பதிவிட்டுள்ளார். லஞ்சம் வாங்குவதை ஒழிக்க எவ்வளவோ செயற்திட்டங்களை முன்னெடுத்தாலும், அரசாங்கத்தினால் சம்பளம் வழங்கப்படுகின்றது.
- Advertisement -
ஆனால், பிரேத பரிசோதனை செய்வதற்கு 7000 தருமாறு கேட்டார்கள்.. “பிரேத பரிசோதனை செய்யும் கூடத்தில் வேலை செய்பவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது? அரசாங்கமா, இறப்பவர்களின் உறவினர்களா?
இப்படி ஒவ்வொருவரிடமும் 7000 ரூபாய் படி வாங்கினால் மாதம் எவ்வளவு ரூபாய் வாங்குவார்கள்.
இதை வைத்தியசாலை நிர்வாகம் கவனத்தில் எடுக்க வேண்டும்… இப்படியான சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடைபெற்றது.

அப்போது இருந்த சட்ட வைத்திய அதிகாரி சிவரூபன் மற்றும் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்தார்கள். அதேபோன்று இந்த நிர்வாகத்தினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். பணிப்பாளருக்கு நபர்களை தெரியப்படுத்த முடியும். நாங்கள் இருந்த மனநிலையில் உடனடியாக நிர்வாகத்திற்கு அறிவிக்க முடியவில்லை” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.