கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் PCR பரிசோதனைக்கான கட்டிடமொன்றை ஜேர்மன் நாட்டு நிறுவனமொன்று அமைக்கவுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த யோசனையை அமைச்சரவைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்திருக்கின்றார்.
- Advertisement -

அதன்படி ஆய்வுக்கூடத்தை கட்டுவதற்காக விமான நிலையத்திற்குச் சொந்தமான பகுதியில் ஒனறரை ஏக்கர் பிரதேசம் ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும், அதற்காக 10000 டொலர் மாதாந்த வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
- Advertisement -

அதேவேளை, பி.சி.ஆர் மற்றும் மாதிரிகளைப் பெற்று ஆய்வுகூட வசதியை அளிப்பதற்காக பயணிகளிடமிருந்து தலா 40 டொலர்களை அறவிட குறித்த நிறுவனம் உத்தேசித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.