தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 600,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர் ஆணையங்களில் விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
- Advertisement -
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் சதவீதம் அண்மைய காலங்களில் மிகப் பெரிய அளவில் அதிகரித்ததுள்ளமை இதுவே முதல் முறையாகும்.
விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோர் சிங்கள பௌத்தர்கள் என்பதும், அறிஞர்கள், கல்வியாளர்கள், வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இதில் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசா வழங்கல் சேவைகளால் உறுதிப்படுத்தப்பட்டபடி, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு செல்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டை நிர்வகிப்பதே இதற்கு காரணமாகும். இதுபோன்ற நிலைமை நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்