ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்படும் கொரோனா தடுப்பூசி ஏற்றும் திட்டம் மற்றும்,
- Advertisement -
அதனுடன் தொடர்புடைய செலவுகளுக்காக இந்த கடன் பெறப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதனடிப்படையில், ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதி அமைச்சும் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நேற்று (09) கைச்சாத்திட்டுள்ளன.