கரந்தன் – ஊரெழு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்-ஹன்ரர் வாகனம் மோதியதில் இரண்டு பெண்கள் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (10) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
ஞானவைரவர் வீதி ஒழுங்கை ஊடாக மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது கரந்தன் -ஊரெழு பிரதான வீதியில் திடீரென ஏறியபோது எதிரே வந்த ஹன்ரர் வாகனத்தல் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கீழேவிழுந்துள்ளனர்.
- Advertisement -
அத்துடன் மோட்டார் சைக்கிள் ஹன்ரர் வாகனத்தின் பவரில் கொழுவியதால் இழுத்துச் சென்று அருகில் உள்ள வீட்டின் மதிலை உடைத்து பாய்ந்து விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று பெண்களில் ஒரு பெண் 8 மாத கர்ப்பிணிப் பெண் என்பதுடன் 2 வயது சிறுமியும் பயணித்துள்ளனர்.
காயமடைந்த இரண்டு பெண்கள் உடனடியாக அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் 2 வயது சிறுமி காயங்களின்றி தப்பியுள்ளார். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டனர்.