ரஷ்யாவின் பயணிகள் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கம்சாட்காவில் இருந்து பலனா நகர் நோக்கி பயணித்த விமானம் ஒன்று, பிரதான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்துள்ளது.
- Advertisement -
இந்த விமானத்தில் 29 பேர் பயணித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் 23 பேர் சாதாரண பயணிகளாவர். விமானத்தை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.