வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இந்த விதிமுறைகள் செல்லுபடியாகும்
- Advertisement -
தடுப்பூசி ஏற்றிக்கொண்ட இலங்கையர்களும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களும் நாட்டிற்கு வருகைதரும் போது PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இதன்போது, COVID தொற்று உறுதி செய்யப்படாதவிடத்து, பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
14 நாளின் நிறைவில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையில் COVID தொற்று உறுதி செய்யப்படவில்லை எனின், அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்
இதேவேளை அனுமதி பெற்று இராஜதந்திர மட்டத்தில் நாட்டிற்கு வருகை தரும் வௌிநாட்டவர்கள், மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தரும் போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.