தமிழ் சினிமாவில் தற்போது பல முன்னணி நடிகர்கள் மாஸ் காட்டி கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனிதனி ரசிகர் பட்டாளம் ஏராளம் என்று தான் சொல்ல வேண்டும் . தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது ரசிகர்களின் ஆரவாரம் வேற லெவலாக இருப்பது சந்தேகமே இல்லை. அந்த அளவுக்கு அணைத்து ரசிகர்களையும் தங்களது நடிப்பின் மூலம் கவர்ந்து உள்ளார்கள் என்பது தான் உண்மை. அந்த வகையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும் , அடுத்த சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் தான் நம்ம தளபதி விஜய் .
- Advertisement -
இன்று ஜுன் 22 இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள். தனது 47-வது வயதை தொட்டாலும் அவருடைய ஆட்டம் பாட்டம் இன்னும் இளமையாகத் தான் இருக்கிறது. நிஜ வாழ்கையில் மிகவும் எளிமையனவராகவும் , அப்பாவி போன்ற முகத்தோடு இருந்தாலும் அதெல்லாம் ஆப் கேமார வரையும் தான், ஆனால் ஷூட்டிங்கில் கேமார ஆன் செய்ததும் அவரின் நடிப்பிற்கு கை தட்டல் மூலமும் விசில் சத்தத்திற்கும் வேர ஏதும் ஈடே இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.
- Advertisement -
நேற்று வெளிவந்த ‘’பீஸ்ட்’’ பட போஸ்டர் வைரலாகி இன்னும் முடிந்தபாடில்லை. ‘’பீஸ்ட்’’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாம். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இரண்டாவது போஸ்டரையும் வெளியிட்டு ஷாக் கொடுத்தார் விஜய். கொரோனா காலமாக இருப்பதால் விஜய் படம் போஸ்டர் வெளியீடு வெளியில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. எல்லாம் ஆன்லைன் கொண்டாட்டங்கள் மட்டும்தான்.
நேற்று வெளியான ‘’பீஸ்ட்’’ பட போஸ்டரில் சில பல ரகசியங்களையும் வைத்து வெளியிட்டு இருக்கிறார்கள் தனது 47வது வயதை அதன் டைட்டிலிலேயே வைத்திருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவுகிறது. A,B,C,D வரிசையில் Beast எழுத்துக்களுக்கான எண்களை சேர்த்தால் விஜய்யின் வயது 47 வருகிறதாம். அதாவது B(2) + E(5) + A(1) + S(19) + T(20) = 47 இப்படி ஒரு பார்முலாவை போட்டு விஜய்யின் வயது தெரிவித்துள்ளதாக நமது ரசிக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர். தற்போது தளபதி பட டைட்டிலில் உள்ள இந்த விஷயங்கள் வெளிவந்து சமுகவளைதலங்களில் தீயாய் பரவிவருகிறது