யாழ்.குருநகர் பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகள் நேற்று மாலை தொடக்கம் முடக்கப்பட்டிருக்கின்றது. ஜே/69 கிராம சேவகர் பிரிவில் 34 தொற்றாளர்களும், ஜே/71 கிராமசேவகர் பிரிவில் 38 தொற்றாளர்களுமாக சுமார் 78 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- Advertisement -
இதனையடுத்து மாவட்ட கொவிட் தடுப்பு செயலணிக்கு வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக நேற்று மாலை தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது. குறித்த இரு கிராமசேவகர் பிரிவுகளிலும் சுமார் 1599 குடும்பங்களை சேர்ந்த, 4820 பேர் வசித்துவருகின்றனர்.
- Advertisement -
மேலும் குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் 2 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தொிவித்திருக்கின்றது.