கோட்டை ரயில் நிலையம் முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.பொலிஸாருக்கும், பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கிய குழுவினருக்கும் இடையிலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.கொத்தலாவவ தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
- Advertisement -
அந்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த பதாதைகளை தம்வசப்படுத்தினர். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரையும் சிறைப்பிடித்தனர். இதனையடுத்தே, ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
கொவிட்-19 புதிய சுற்றறிக்கை, வழிகாட்டல்களின் பிரகாரம், மக்கள் ஒன்றுக்கூடுவது தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஒருமாதகாலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை, ஒருமாதத்துக்குப் பின்னர், இன்று நாடளாவிய ரீதியில் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.