திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும் வாளால் வெட்டியவரின் 6 மாத குழந்தை ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று(19) பிற்பகல் 2.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர்.
- Advertisement -
இதேவேளை குறித்த சம்பவத்தில் 6 மாத குழந்தை வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுள்ளது.
எனினும் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த ஆறு மாத குழந்தையின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி வருவதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.