இலங்கையில் இன்று காலை 06 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் கொழும்பு வெள்ளவத்தையில் எழுபத்து மூன்று (73) கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த காலகட்டத்தில் கொழும்பு மாநகரப்பகுதியில் 177 தொற்றுக்களில் இந்த 73என்ற எண்ணிக்கையும் அடங்குகிறது.
- Advertisement -
நாரஹன்பிட்ட மற்றும் பொரெல்ல பகுதிகளில் தலா இருபது கோவிட் தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதே நேரத்தில் மட்டக்குளியவில் 14 தொற்றுக்கள் கண்டறியப்பட்டன.
கறுவாத் தோட்டப் பகுதியில் எட்டு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், தலா ஏழு பேர் புளூமெண்டால் மற்றும் தெமட்டகொட பகுதிகளில் கண்டறியப்பட்டனர்.
கிராண்ட்பாஸ் மற்றும் ஹல்ட்ஸ்டொர்ப் ஆகிய இடங்களில் தலா ஐந்து பேரும் மருதானை , கொம்பனித்தெரு , மற்றும் கொள்ளுபிட்டிய ஆகிய இடங்களில் தலா நான்கு பேரும் கோட்டையில் மூன்று, பம்பலபிட்டியவில் இரண்டு மற்றும் புறக்கோட்டையில் ஒருவர் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தின், அவிசாவெல்லாவிலிருந்து 96 பேரும், பாதுக்கையில் இருந்து 47, மற்றும் பிலியந்தலயில் 33 பேரும் தொற்றாளிகளாக பதிவாகியுள்ளனர்.
ஹோமகமவிலிருந்து 18 பேரும், கொஸ்கம, கல்கிஸ்ஸ மற்றும் வெல்லம்பிட்டியவிலிருந்து தலா 15 பேரும், ஹன்வெல்லவைச் சேர்ந்த 14 பேரும், கொட்டாஞ்சேனையிலிருந்து 13 பேரும் தொற்றுக்களுடன் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மீதமுள்ள பகுதிகளிலிருந்து தலா 10க்கும் குறைவான கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இன்று காலை 06 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 516 கோவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
2020 மார்ச்சில் ஆரம்பத்திலிருந்து இதுவரை இலங்கையில் 230, 692 தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். அவற்றில், 194,145 பேர் குணமாகியுள்ளனர்.
அதே நேரத்தில் 34,232 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர். இலங்கையில் கோவிட் வைரஸ் காரணமாக மொத்த இறப்பு எண்ணிக்கை 2,374 ஆக பதிவாகியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 2, 380 354 பேர் ஒரு கோவிட் -19 தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர், 702,551 பேர் 2வது அளவைப் பெற்றுள்ளனர்.