சிறப்பங்காடிகளில் இணையத்தளத்தின் ஊடாக (ஒன்லைன்) மதுபானங்களை கொள்வனவு செய்யமுடியும் என பரவும் செய்தி உண்மைக்கு புறப்பானது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வகையான மதுவிற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ள அதேவேளை, சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் மது விற்பனையை தடுக்கும் வகையில், மதுபானசாலைகளுக்கு முத்திரையிடப்பட்டுள்ளன.
- Advertisement -
இந்நிலையில், ஒன்லைன் முறைமையின் ஊடாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தகவலொன்று பகிரப்பட்டு வந்தது. எனினும், இந்த முறையினூடாக மதுபானம் விற்பனைக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், குறித்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் மதுவாித் திணைக்களம் தெரிவித்துள்ளது.