சிறுவர்களுக்கு முகக் கவசம் அணிவதில் எந்த சிக்கலும் இல்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே கூறியுள்ளார்.
- Advertisement -
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்வதற்கும் அதேபோன்று கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
- Advertisement -
மேலும் பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.