கொரோனா தொற்று நோயாளர்களுக்கு வீடுகளுக்கு சென்று சிகிச்சை வழங்கும் வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரையும், அவரது உதவியாளர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
- Advertisement -
மேலும் கெஸ்பேவ பகுதியில் வைத்து, இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -

அத்தோடு வைத்தியர் என அடையாளம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வேன் ஒன்றில் வருகைத் தந்து, கொரோனா நோயாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சை வழங்கும் வகையில் இவர்கள் செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் வீட்டிற்கு வருகைத் தந்து சிகிச்சைகளை வழங்குவதற்காக 11ஆயிரம ரூபா முதல் 13ஆயிரம் ரூபா வரை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.