கொழும்பு தேசிய மருத்துவமனை பிரேத அறையில் மூன்று மாதங்களாக அடையாளம் காணப்படாத நிலையில் 20 சடலங்களை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- Advertisement -

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான சடலங்கள் ஆண்களுடையவை மற்றும் ஒரு பெண்ணின் சடலமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -

சடலங்களை அடையாளம் காண அந்தந்த பொலிஸ் நிலையங்கள் ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும், சடலங்களின் உரித்துடையவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அவற்றை ஒப்படைக்கவுள்ளதாகவும் கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சடலங்களை அடையாளம் காண முடியாவிட்டால், அவை அரசாங்கத்தின் செலவில் அடக்கம் செய்யப்படும் என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.