பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த யுவதிக்கு தனது காற்சட்டை சிப்பை கழற்றி காண்பித்தஇளைஞன் நையப்புடைக்கப்பட்டுள்ளான். யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் இந்த பரபரப்பு சம்பவம் நேற்று காலை நடந்துள்ளது.
மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வவுனியா செல்லும் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வவுனியா செல்லும் பயணிகள் பேருந்தில் ஏறி உட்கார்ந்தபடியிருந்தனர்.
- Advertisement -
இந்த நிலையில் யுவதியொருவரும் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தார்.பெண்களுடன் ஒட்டி, உரசுவதற்காகவே மத்திய பேருந்து நிலைய பகுதியில் அடிக்கடி உலாவும்
மைனர் குஞ்சான வாலிபன் ஒருவனும் பேருந்தில் ஏறி, யுவதிக்கு பக்கத்தில் உட்கார்ந்துள்ளான்.
பேருந்தில் ஆட்கள் குறைவாக இருந்த நிலைமையை பயன்படுத்தி, தனது காற்சட்டை சிப்பை
திறந்து, மர்ம உறுப்பை காண்பித்துள்ளார்.
இதனால் மிரண்ட யுவதி, அலறி சத்தமிட்டு, உதவி கோரினார். அந்த பகுதியில் நின்றவர்கள் உடனடியாக பேருந்தில் ஏறி, நடந்ததை விசாரித்த போது, மைனர்
குஞ்சு வசமாக சிக்கினான். அவனை பேருந்தில் இருந்து இறக்கி, நையப்புடைத்தனர்.
இனிமேல் மத்திய பேருந்து நிலைய பக்கமே தலைவைத்தும் படுக்க மாட்டேன் என மைனர் குஞ்சு கதறியதையடுத்து, அவனை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.