யாழ்.பருத்துறை புலோலி மேற்கு பகுதியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி மரண சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, புலோலி மேற்கு பகுதியில் நடைபெற்ற மரண சடங்கு ஒன்றில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவானவர்கள் கலந்துகொண்டனர்.
- Advertisement -
மேலும் முகக் கவசம் அணியாமல் மதுபோதையில் மேள வாத்திய இசைக்கு ஆட்டம் போட்டு போக்குவரத்திற்கும் இடையூறு விளைவித்திருக்கின்றனர்.
குறித்த விடயம் பொதுமக்களால் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகருக்கு தொியப்படுத்தப்பட்ட நிலையில் உடனடியாக பொதுச்சுகாதார பரிசோதகர் மரண சடங்கில் கலந்து கொண்டவரை அறிவுறுத்தியுள்ளதுடன்,
சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு இறுக்கமாக கூறியுள்ளார். எனினும் பொதுச்சுகாதார பரிசோதகரின் கருத்துக்களை உள்வாங்காததுடன்,
அவருடைய கடமைக்கும் இடையூறு விளைவித்துள்ளனர். இதனையடுத்து இறுதி ஊர்வலத்தை நடத்தியவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறியவர்கள்.
அவர்களது வீடுகளில் குடும்பத்தினருடன் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.