தமிழ் சினிமாவில் தற்போது புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பேராதரவால் வசூலை வாரி குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் மற்ற நடிகர்களைப் போல ஒரு சில வெற்றிப் படங்களும் ஒரு சில தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார்.
- Advertisement -
அப்படி ஒரே நேரத்தில் நடிகர் விஜய் இரண்டு இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பின்பு அப்படத்தில் நடிக்க கஷ்டப்பட்டு உள்ள சம்பவம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த நடிகர் விஜய் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிற்கும் மற்றும் இயக்குனர் பாசிலுக்கும் ஆரம்ப காலத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
ஆனால் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தமிழ் ரசிகர்கள் திரும்பி பார்க்கக் கூடிய அளவிற்கு வசூல் சாதனை படைத்தது.
ஆனால் பாசில் இயக்கத்தில் விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் தோல்வியை அடைந்தது.
ஆனால் இந்த 2 இயக்குனருக்கும் ஒரே நேரத்தில் தான் கால்ஷீட் கொடுத்துள்ளார் நடிகர் விஜய் அப்போது என்ன செய்வது என தெரியாமல் 2 பேர் படங்களில் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களில் ஒரு படம் வெற்றி பெற்றதால் மனதை தேற்றிக்கொண்டு உள்ளார்.