நாட்டில் சிறுவர்கள் மத்தியில் ஒருவகை தொற்று நோய் பரவி வருவதாக சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்திருக்கின்றார்.
எண்டி புட்டி மவுத் டிசிஸ் என அறியப்படும் இந்த நோய், 6 மாதம் முதல் 5 வயது சிறுவர்களுக்கு ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
காய்ச்சல், உடல் வலி, கைகள், கால்கள் மற்றும் வாயில் சிவப்பு புள்ளிகள் ஏற்படல் ஆகியன இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
இது ஒரு பிள்ளையிடம் இருந்து மற்றுமொரு பிள்ளைக்கு தொற்ற கூடியது என வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.