ஆண்ட்ராய்டு போன் வந்ததிலிருந்தே ஆண்களின் காம வலையில் இளம்பெண்கள் சிக்கி சின்னாபின்னமாவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் பொள்ளாச்சி சம்பவம், நாகர்கோவில் காசி ஆகியோரை தொடர்ந்து அடுத்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள், நாகர்கோவில் காசி போன்றோர் கதைகளுக்கே விடை தெரியாத நிலையில் தற்போது அவர்களைப் போன்றே தஞ்சாவூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்ற நபர் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த கமல கண்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறை தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
- Advertisement -
இரவு நேரங்களில் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி இளம்பெண்களுக்கு நட்பு ரீதியாக அழைப்பு விடுத்து பின்னர் நட்பாக பேச ஆரம்பித்து அவர்களது உணர்ச்சியை தூண்டி காம வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதில் 14 வயது குழந்தைகள் முதல் 30 வயது பெண்மணிகள் வரை அனைவருமே சம்பந்தப்பட்டுள்ளனர்.
பாண்டிச்சேரியை சேர்ந்த 14 வயது பெண் குழந்தைக்கு ஆன்லைன் வகுப்புகளுக்காக ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி கொடுத்துள்ளனர். ஒரு சில நாட்கள் படிப்பு முடிந்ததும் மொபைலை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அந்த சிறுமி அடுத்த சில நாட்களில் 24 மணி நேரமும் மொபைலும் கையுமாக அலைந்ததை பார்த்த பெற்றோர் சந்தேகமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஒருநாள் நள்ளிரவில் தன்னுடைய ஆடைகளை எல்லாம் களைந்துவிட்டு உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் மொபைல் முன்பு நின்று சேட்டை செய்ததை பெற்றோர் கண்டுவிட்டனர். உடனடியாக அந்தப் பெண்ணை விசாரிக்கையில் இதுபோன்ற தகவல்களை தெரிவித்துள்ளது. போலீசில் பெற்றோர் கொடுத்த கம்ப்ளெய்ண்ட் தொடர்ந்து விசாரிக்க ஆரம்பித்த போதுதான் கமலக்கண்ணன் என்ற நபர் 200க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வலையில் சிக்க வைத்துள்ளார் எனவும், அவர்களது 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அவரிடம் இருந்ததாகவும் கூறி அவரை கைது செய்து போக்சோ சட்டத்தின் அடிப்படையில் சிறையில் அடைத்து விட்டனர்.
ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் குழந்தைகள் நாளுக்கு நாள் கெட்டுப்போகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் கொஞ்சம் தங்களது குழந்தைகள் மேல் அக்கறை எடுத்து அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு போலீசார் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.