யாழ்.மிருசுவில் – கெற்பேலி பகுதியில் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த இளைஞன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
- Advertisement -
வழிமறித்த ஒருவர் இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றார். சம்பவத்தில் க.ததுர்சன்(வயது25) என்ற இளைஞன்
உடனடியாக மீட்கப்பட்டு சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். சம்பவம தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.