இலங்கையில் தற்போது பலவித காய்ச்சல் வைரஸ் பரவிவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் தொற்றுநோய் சார்ந்த விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் போன்று, வைரஸ் காய்ச்சல் பரவியிருப்பதாகவும் நாட்டின் பல பகுதிகளிலும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெறுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
- Advertisement -
குறிப்பாக சிறுவர்களிடத்திலேயே இவ்வாறு வைரஸ் காய்ச்சல் பரவுகிறது எனக் கூறிய அவர், வாய் சுற்றி அரிப்பு ஏற்படுதல், கை, கால்களில் சிறப்புநிற அடையாளங்கள் ஏற்படுதல் போன்றன அதன் அறிகுறிகளாகும் என்றும் தெரிவித்தார்.