பொது போக்குவரத்து சேவையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பயணிகள் தனிமைப்படுத்தல் விதிகளை பேணுகின்றார்களா? என்பது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டிய பொறுப்பு சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் உள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
- Advertisement -
இந்த விடயம் தொடர்பில் சகல போக்குவரத்து காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய பொது போக்குவரத்துகளில் தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் அவர்கள் ஆராயவுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.