அனலைதீவில் பல செயற்பாடுகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி.வின்சன் சுபத்ரா அவர்கள் நேற்றைய தினம் இரவு மாரடைப்பினால் காலமானார்.
இந்த தகவலை குணாளன் கருணாகரன் என்பவர் முகநூலில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். மேலும் வின்சன் சுபத்ரா என்பவர் குறித்து தெரிவிக்கையில்,
- Advertisement -
கொரோனா காரணமாக பெரும் பாதிப்புகளுக்கு உள்ளான அனலைதீவு, அல்லைப்பிட்டி பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 குடும்பங்களுக்கு ரூபாய் 42000 பெறுமதிமிக்க உலர் உணவுப்பொருட்கள், முககவசம், கிருமிநாசினி பொருட்கள் என்பன தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் வழங்கிய குறித்த சேவையில் முக்கிய பங்கினையாற்றியுள்ளார்.