நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் 3 கொலை சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற கொலைகள் இரண்டும் தவறான உறவு காரணமாக இடம்பெற்ற கொலைகள் என தெரியவந்துள்ளது. திஸ்ஸமஹாராம சந்தகிரிகம பிரதேசத்தில் 48 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலனின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
இதேவேளை, ஹிதோகம, ஹீனாபோவாகம பிரதேசத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் தவறான உறவு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தொடர்பில் இருந்த பெண்ணின் கணவரே அவரை வெட்டி கொலை செய்துள்ளார். அத்துடன் பொத்துஹெர ரத்கல்ல பிரதேசத்தில் 64 வயதுடைய தனது தந்தையின் கழுத்தை நெறித்து 45 வயதுடைய மகன் கொலை செய்துள்ளார்.
சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.