யாழ்.சாவகச்சோி – மீசாலை பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர் திருட்டு கும்பலினால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த செல்லையா சிவராசா (வயது80) எனும் வயோதிபரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில்,
- Advertisement -

சாவகச்சோி அல்லாரை வீதி மீசாலை கிழக்கில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் தனிமையில் இருந்த என்ற முதியவரை கழுத்தில் துணிபோட்டு இறுக்கி கொலை செய்துள்ளனர்.
அத்துடன் கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுது வருவதாக தெரியவருகின்றது.