மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளரான மா.தயாபரன் அவர்கள் செய்யும் இந்த விடையம் முற்றிலும் தவறானது மனிதாபிமானம் அற்றது கூட என பாராமன்ற உறுப்பினர் ஜனா மிக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கிழக்கு மாகாணத்தில் அதுவும் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மூதூர் ஆகிய பிரதேசங்களில் வறுமை கோட்டின்கீழ் வாழ்கின்ற மக்களின் நலன் கருதியும்.
- Advertisement -

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சடலங்களை இலவசமாக அவர்களது வீடுகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த அமரர் ஊர்தியின் சேவை ஆரம்பிக்கப்பட்டு தேவை சேவைகளை செய்து வருகிறது என்று தெரிந்தும் கூட இந்த செயலைச் செய்வது குற்றமே.
இவ்வாறு மாநகர ஆணையாளர் என்ற பதவியை வைத்து கொண்டு மக்களின் பெரும் குறையொன்றை தீர்க்கும் அமரர் ஊர்தி மாநகர வாகன தரிப்பிட வளாகத்தில் இருந்தமையால் அந்த அமரர் ஊர்தியைச் சுற்றி கல்களை போட்டு வைத்திருப்பது மனிதாபிமானம் அற்ற செயல்.
மட்டு மாநகர சபை 38 உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் பிரகாரம் அமரர் ஊர்தியை வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இவ்வாறு உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த முடிவின் பிரகாரம் நிறுத்தப்பட்ட அமரர் ஊர்தியை எந்த வகையில் ஆணையாளர் கல்களை கொண்டு நிரப்ப முடியும்??
மக்களின் குறையொன்றை தீர்த்து வைக்கும் இச்சேவையை கீழ்நிலைப்படுத்துவது முற்றிலும் தவறானது சட்டவிரோதமுமானது
ஆகையால் குறித்த விடையம் சார்பாகவும் சட்டவிரோத செயலுக்கெதிராகவும் ஆணையாளரை நியமனம் செய்த கிழக்கு மாகாண ஆளுனர் ஆணையாளர் மா. தயாபரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்