எனது மகளுக்கு ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு இராணுவமே முழுமையான பொறுப்பு என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் அதிகாரம் பொருந்திய அமைப்பான இரணுவம், தனது மகள் மரியம் நவாஸை அச்சுறுத்தி வருவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.
லண்டனில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்ட நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் அரசு மற்றும் இராணுவம் தனது மகள் மரியம் நவாசை மிரட்டி வருகிறது. அவருக்கு ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு பிரதமர் இம்ரான் கான் மற்றும் முப்படைகளின் தளபதிகளே காரணம்.
- Advertisement -
ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு மருத்துவ காரணங்களுக்காக 4 வாரங்கள் ஜாமீன் அளித்து லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இம்ரான் கான் அரசு நாவஸ் ஷெரீப் அரசுக்கு அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், இதுவரை நாடு திரும்பவில்லை. எனது மகளுக்கு ஏதேனும் விபரிதம் நடந்தால் பாகிஸ்தான் இராணுவமே பொறுப்பு என நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.