இலங்கையில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்துத் தகுதிகளும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கே உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
- Advertisement -

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மீண்டுமொரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. அதனால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போதைக்குக் கதைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
- Advertisement -
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிடப் போகின்றார்கள் என்பது குறித்து சரியாகக் கூற முடியாது என்ற போதிலும், பஸில் ராஜபக்சவுக்கு அந்தத்தகுதி உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவார் எனவும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் எனவும் எந்தவொரு நபரும் எதிர்பார்க்கவில்லை என்றார்.