கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய அரசின் தலையீடு இன்றி அதானி நிறுவனத்துடன் பேச்சு நடத்த உள்ளதாக கோட்டாபய அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்றையதினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.
- Advertisement -
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -

இந்திய அரசாங்கத்தின் தலையீடு இன்றி, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை ஆரம்பகட்ட கொரோனா தொற்று காலத்தில் நாட்டை முழுமையாக மூடியதால் பொருளாதார ரீதியில் சரிவு ஏற்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதனால் இரண்டாம் கட்ட கொரோனா தொற்றின் போது நாட்டை மூடாமல் இருக்க ஜனாதிபதி தீர்மானித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். ஐந்து வருடங்கள் சீரழிக்கப்பட்ட பொருளாதாரம் நாட்டில் காணப்பட்டதால் மீண்டும் மீண்டும் நாட்டை மூடி வைக்க வேண்டிய நிலை இருக்கவில்லை எனவும் நாடு திறக்கப்பட்டதால் வைரஸ் பரவியதாகவும் கம்மன்பில கூறினார்.