ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்திகள் உண்மையில்லை என ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட இந்த கூட்டணி அமையும் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவும் குறித்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என கூறியுள்ளார்.