சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று சங்குபிட்டி – பூநகரி வீதித் தடையையில் வைத்து இராணுவத்தினரால் நேற்று (03) கைப்பற்றப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான வெண் சந்தனம் மற்றும் பாலை மரக்குற்றிகளுடன் இராணுவத்தின் வீதித் தடையில் நிறுத்தாமல் பயணித்த கெப் ரக வாகனமே படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சந்தேக நபர்கள் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
