ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தால் நாட்டின் பொருளாதார விடயங்களில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் கவலையடைந்துள்ளனர். இந்த கவலையளிக்கும் நிலைமை மோசமடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சரும் அதன் அதிகாரிகளும் எடுக்கவேண்டிய தேவையுள்ளது என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் சுதந்திரமாக செயற்படுவதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை உறுதிப்படுத்த முடிகின்ற அதேவேளை வெளிவிவகார கொள்கைகளை ஜனாதிபதி செயலகமே பெருமளவிற்கு கையாள்கின்றது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கும்போது வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் காணப்படாத நிலையே தொடர்கின்றது.