கோவக்ஸ் திட்டத்தின் கீழ் 3.5 மில்லியன் டோஸ் தடுப்பூசியை கூடுதலாக பெறுவோம் என்றும் அவர் மேலும் கூறினார். COVID19 தடுப்பூசி முன்னுரிமை-பட்டியலைப் பின்பற்றாமல் தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் பல இடங்களில் பலருக்கு வழங்கப்பட்டதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. தgடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் ரமேஷ் பதிரண கூறினார்.
- Advertisement -

குறுகிய காலத்திற்குள் 14 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட்டு உலக சாதனை படைக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண கூறினார். மேலும் 10 மில்லியன் அளவு ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து 52.5 மில்லியன் செலவில வாங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.