கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோ தடுப்பூசி போடுவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், சில பகுதிகளில் தொடர்ச்சியாக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்களாயின் அவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கப்படும்.
- Advertisement -

உதாரணமாக, நாரஹென்பிட்டியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டுள்ளனர் என்று கூறினார். மேலும் தடுப்பூசி செயல்பாட்டில் கொரோனா ஆபத்தான பகுதிகளை கவனத்தில் எடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு வழங்கியுள்ளார் என்றும் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அந்த வகையில், வைரஸ் அதிகம் பரவும் நகரங்கள், கிராமங்கள் அல்லது கிராம சேவகர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டு, அந்த பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பமாகும் என்று அவர் கூறினார்.