ஆண்களைவிட பெண்களுக்கு இதய பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மாதவிடாய் தருணங்களில் இடுப்பு பகுதியில் சேமிக்கப்படும் அதிகளவு கொழுப்பு காரணமாக பெண்களுக்கு இதய பாதிப்பு அதிக அளவில் ஏற்படுவதாக அண்மையில் கண்டறியப்பட்டிருக்கிறது.
உலகளவில் மூன்று பெண்களில் ஒரு பெண்களுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டு, மாரடைப்பு உண்டாகிறது. இதற்கு பெண்கள் திருமணத்திற்குப் பிறகும், தாய்மை அடைந்த பிறகும் அவர்கள் தங்களின் உடல் எடையை சீராக பேணாததும், இரத்த அழுத்த பாதிப்பை சீராக கட்டுக்குள் வைக்காததும் தான் காரணம் என மருத்துவத்துறை அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் பெண்களுக்கு ஏற்படும் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அவர்கள் மாதவிடாய் தருணங்களிலும், மாதவிடாய் நின்ற பிறகும் இடுப்பு பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பின் அளவுகளும் ஒரு காரணம் என கண்டறியப்பட்டிருக்கிறது.
பெண்களுக்கே உள்ள ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹோர்மோனின் சுரப்பு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மை, அவர்களின் இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே பெண்கள் தங்களின் இடுப்பு அளவு குறித்து எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இது தொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனையை கட்டாயம் பெறவேண்டும். இதய பாதிப்பை ஏற்படுத்தும் அதிகரித்திருக்கும் இடுப்பு அளவை குறைக்க, தற்போது Vesar Liposuction என்ற சிகிச்சை பலனளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.