நாம் ஒரு இடத்தில் அதிக நேரம் அமர்ந்து இருந்தால் இரத்த ஓட்டம் சீராக செயல்படாததால் கை அல்லது கால் மரத்து போவது வழக்கம் தான். ஆனால் இதை தாண்டி மரத்து போவது பல நோய்களின் அறிகுறியாகவும் உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கை அல்லது கால் ஒரு பக்கம் முழுவதும் மரத்து போனால் மூலை அல்லது முதுகு தண்டில் ஏதோ நோய் இருப்பதாக அர்த்தம்.
அதே போல் இரண்டு பக்கமும் மரத்துப் போனால் சர்க்கரை நோய் அதிகமாகிவிட்டதாக அர்த்தமாகிறதாம். அதே போல் அடிக்கடி இந்த மரத்துப் போகும் பிரச்சனை இருந்தால் மரபணு பிரச்சனையாக இருக்கலாமாம்.

கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகள் அடிக்கடி மரத்துப்போய் அவதிப்படுகிறவர்கள் ஒரே இடத்தில், ஒரே மாதிரியான நிலையில் பல மணிநேரம் வேலை செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். உடல் உறுப்புகள் மரத்துப்போவதென்பது நோய் கிடையாது. ஆனால், நீரிழிவு, தைராய்டு, வைட்டமின் குறைபாடு போன்ற பலவித நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். ஒருவருக்கு கை, கால்கள் மரத்துப் போவதற்கான காரணங்களை அறிந்து, அதற்கு ஏற்றவாறு நரம்பியல் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.

ஆண்டிபயாடிக் மாத்திரைகள் பயன்படுத்துபவர்கள், கேன்சர் நோய்க்கான மருந்து குடிப்பவர்களுக்கு இந்த கை கால் மரத்துப் போகும் பிரச்சனை இருக்குமாம்.
ஒரு சிலருக்கு ஒரு கை தோள் மூட்டுப் பகுதி உளைச்சல் ஏற்படும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்வோம். அப்படி ஒரு பக்க உளைச்சல் ஏற்பட்டால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டிருப்பதாக அர்த்தமாம். ஒரு சிலருக்கு தலை கழுத்து போன்றை மரத்து போன மாதிரி இருக்கும் இது தைராய்டு நோயின் அறிகுறிகளாம். கொழுப்பு அதிகரிப்பதும் இந்த மரத்து போகும் பிரச்ச்ணைக்கு காரனமாகிறதாம்.

எனவே உறவுகளே ஒரு இடத்தில் இருந்து அல்லது நின்று வேலை செய்யும் தருணங்கள் தவிர்த்து உடல் உறும்புகள் மரத்துப் போதல் இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள். இது ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.