உடலுக்கு பல்வேறு வகையிலும் ஆரோக்கிய நன்மைகளையளிக்கும் தேன் இனிப்பு சுவை கொண்ட ஒரு பதார்தமாகும். இருந்தபோதிலும் அளவுக்கு அதிகமாக தேனை உட்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என ஒரு ஆய்வு கூறுகிறது.
- Advertisement -
தேனில் அதிகளவில் இயற்கையான இனிப்பு சுவையுள்ளது. இது ஒரு மருந்துப் பொருள் எனினும் இதில் அதிகளவு சர்க்கரையும் அடங்கியுள்ளது. தேனில் உள்ள இந்த சர்க்கரை காரணமாக தேனை அளவுக்கு மீறி எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு பாதகமாக அமைந்துவிடுகிறது.
- Advertisement -
தேன் இயற்கையாகவே ஒரு நுண்ணுயிர் கொள்ளியாகும். ஆகவே தான் உடல் காயங்களுக்கு தேன் சிறந்த ஒரு மருந்தாக கருதப்படுவதோடு, காயங்களும் விரைவில் குணப்படுத்தப்படுகின்றன. மேலும் தேன் இருமல் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. இருந்தபோதிலும் உடலுக்கு அளவுக்கு அதிகமான தேன், உடல் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
அளவுக்கு அதிகமாக தேன் உட்கொள்வது எவ்வாறான ஆபத்துக்களை விளைவிக்கும்?
சர்க்கரை நோயாளிகள்
தேன் இயற்கையாகவே இனிப்பு சுவையுடையாதெனினும், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் தேனை எடுத்துக்கொள்ளும் போது அவதானமாக இருக்க வேண்டும். அதிகளவில் தேன் எடுத்துக்கொள்வதென்றால் இதற்காக நீங்கள் வைத்தியரின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதும் பொருத்தமானது.
உடல் எடை
தேனில் காணப்படும் சர்க்கரை மற்றும் காபோஹைட்ரேட் இணைந்து உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். இது பற்றியும் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
பற்களில் ஏற்படும் பாதிப்புக்கள்
நீங்கள் தேனை உட்கொள்ளும் அளவுக்கு அதிலுள்ள சர்க்கரையையும் உட்கொள்கிறீர்கள். இவ்வாறு தேனை அதிகமாக உட்கொள்வது உங்கள் வாய் மற்றும் பற்களின் சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும். தேன் ஓட்டும் தன்மை கொண்ட பாகு நிலையில் காணப்படும் ஒரு பொருள் என்பதால், தேனை உட்கொண்டதன் பின்னர் அவை பற்களில் படியாமல் இருக்க வாயை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பற்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணமாகிவிடும்.
ஒவ்வாமை
தேன் உட்கொள்வதால் சனத்தொகையில் மிகவும் ஒரு சிறிய அளவினருக்கு ஒவ்வாமை ஏற்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆகவே இவ்வாறு தேனுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், தேனை உட்கொள்ள முன்னர் இது பற்றி அவதானத்துடன் இருக்க வேண்டும்.