கலியுகத்தில் காக்கும் கடவுளாக விளங்கும் பைரவர் வழிபாடு செய்வது மகத்துவமான பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும்.
தீராத நோய்கள் தீரவும், மாறாத கடன் பிரச்சனைகள் மாறவும், நீங்காத கவலைகள் எல்லாம் நீங்கவும் வணங்க வேண்டிய கால பைரவர் வழிபாடு தேய்பிறை அஷ்டமியில் செய்யும் பொழுது எவ்வளவு பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
- Advertisement -
உங்களுக்கு இருக்கும் அத்துணை கவலைகளும் நீங்கி, உள்ளமும், மனமும் ஆரோக்கியமாக இருக்க இந்த நாளை தவறவிடாதீர்கள்!
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபாடு செய்வது விசேஷமான பலன்களை கொடுக்கும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பைரவர் வழிபாடு செய்பவர்களுக்கு எவ்விதமான நோய்களும் அண்டுவதில்லை. கோடி கோடியாக கடன்கள் இருந்தாலும் பைரவரை வழிபட அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.
பைரவரை எப்படி வழிபட்டால் என்னென்ன பலன்களை பெற முடியும்! என்பதை இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.
தேய்பிறை அஷ்டமியில் பைரவர் சந்நிதிக்கு சென்று அங்குள்ள பைரவருக்கு எள் தீபம் ஏற்றுவது அல்லது மிளகு தீபம் ஏற்றுவது நல்ல பலன்களை கொடுக்கும். கருப்பு துணியில் சிறிதளவு கருப்பு எள் போட்டு முடிந்து அதனை அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகல பிணிகளும் தீரும்.
எவ்வளவு நோய்கள் இருந்தாலும் நம்மை விட்டு எளிதாக அவை விலகி ஓடிவிடும். அது போல கருப்பு துணியில் 27 மிளகுகளை வைத்து முடிந்து நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் எவ்வளவு கடன் தொகைகள் இருந்தாலும் அவைகள் எளிதாக நீக்கி விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். மேலும் உங்களுக்கு இருக்கும் பகைவர்கள் தொல்லையும் இதனால் ஒழியும் .
நம்மை சுற்றி இருக்கும் அத்தனை பேரும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஒவ்வொரு அடியும் முன்னேறும் பொழுது நம்மை பார்த்து பொறாமை படுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை எதிர் கொள்வதற்கு காலபைரவரை வழிபட்டு வருவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
இன்று மாலை பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி மிளகு தீபம் அல்லது எள்ளு தீபம் போன்ற தீபங்களை ஏற்றி வழிபட்டு வந்தால் மேற்கூறிய பலன்கள் கிடைக்கும். மேலும் பைரவருக்கு உகந்த சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை.
இந்த மலர்களை கடையில் வாங்குவதை விட உங்கள் வீட்டில் நீங்கள் வளர்க்கும் செடிகளில் சிவப்பு மலர்கள் பறித்துக் கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறத்தில் இருக்கும் எந்த மலரையும் பைரவருக்கு போட்டு அர்ச்சனை செய்யலாம். ஒவ்வொரு முறை அர்ச்சிக்கும் பொழுதும் பைரவ அஷ்டகம், பைரவர் போற்றி, பைரவர் மந்திரம் ஆகிய ஏதாவது ஒன்றை உச்சரித்தால் அத்தனை பலன்களும் எளிதாக கிடைக்கும்.
மேலும் சனிதோஷம் நீங்கவும், சிவபெருமான் அருள் பெறவும் பைரவர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலன்களை கொடுக்கும். சனி பகவானுக்கு குருவாக விளங்கும் காலபைரவரை வணங்கி வந்தால் சனி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. தேய்பிறை அஷ்டமியில் கருப்பு நிற நாய்களுக்கு உணவிட்டு வர சகலவிதமான நன்மைகளும் நமக்கு உண்டாகும்.